நன்மரணமடைய சேசுநாதரை நோக்கி செபம்.

மதுரமான சேசுவேதயை மிகுந்த ஆண்டவரான சேசுக்கிறீஸ்துநாதரே, மிகுந்த மனஸ்தாபப்பட்டுக் கலங்கிப் பிரலாபித்து உமது திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிற அடியேனைப் பாரும்பாவத்துக்கு ஆசைப்பட்டு உமது நேச அழைத்தலைக் கவனியாமல்தேவரீரை இப்பொழுது நான் புறக்கணித்து நிந்திக்கலாம்ஆனால் ஒருநாள் நான் சாவது நிச்சயம்நான் நினையாத நேரத்தில் மரணம் வந்து என்னைப் பிடித்துக்கொள்ளும்மின்னலலைப் போலும்அதிதுரிதமாக அது வந்தென்னைக் கைப்பற்றும்அதன்பின் எனது தீர்வை நடக்கும்அது மோட்ச இன்பத்திற்கோநித்திய நரக வேதனைக்கோ என்னை நிச்சயிக்கும்.

என் அன்பான சேசுவேஎன் பலவீனத்தையும்பாவச் சார்பையும் அறிந்திருக்கிற நான்என் நிர்ப்பாக்கியத்தில் உம்மையேஓ சேசுவேஉலக சீவியத்தின் முக்கியமான நேரமாகிய மரண அவஸ்தையில்என்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சி மன்றாடுகின்றேன்.

என் கால்கள் இரண்டும் அசைவின்றிஉஷ்ணமின்றி என் படுக்கையிலே கடினமாய் வலித்துநான் இவ்வுலகில் செய்த பயணம் முடிந்ததென்று காட்டும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கைகளிரண்டும் அதிர்ந்துநடுநடுங்கிப் பலனற்றுகடைசிச் சரணமாக ஏந்தியிருக்கிற உமது திருச்சிலுவை சுரூபத்தை கைநெகிழ விடும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் உதடுகள் குளிர்ந்துகறுத்துக்கிடுகிடுத்துஉமது திருநாமத்தைக் கடைசிவிசையாய் உச்சரிக்கும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கன்னங்களிரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிமரணத்தின் அடையாளமாய் வெளுத்துஎன் தலையோடு மயிரொட்டிஎன் நெற்றியிலே வியர்வை எழஎன்னைச் சூழ்ந்து நிற்பவர்களுக்குப் பயங்கரமும் அருவருப்பும் வருத்துவிக்கும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் கண்களிரண்டும் பஞ்சடைந்துஅகோரமாய்த் திகைத்துபயங்கரமாய் விழித்துஇவ்வுலகத்திலுள்ள பொருட்களை ஒன்றும் காணாமல்தன்னந்தனியே அச்ச நடுக்கத்தோடு நான் சரணடைகிறபோதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் காதிரண்டும் கேள்வியற்றுமனித சம்பாஷனையை விட்டுப் பிரிந்துநீர் ஊழியுள்ள காலம் இடப்போகிற தீர்வையைக் கேட்கத் தயாராகும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

மயங்கும் என் மனதிலே அச்சம் உறுத்தவீண் எண்ணங்களும் அவலட்சணத் தோற்றங்களும் தோன்றிபயங்கரமாயிருக்கும் அந்நேரத்தில்தயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

இப்பயங்கரத்தினால் என் இருதயம் கலங்கியிருக்கும் வேளையில்பசாசு என் பாவங்களை மிகுவித்துஉமது நீதியைப் பெருக்கிஉமது அளவில்லாத கிருபையை மறைத்துநான் அவநம்பிக்கையாய்ச் சாக என்னோடு கடைசி யுத்தம் நடத்தும்போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாயிருக்கும் போதுதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

மரணம் மட்டும் கடைசிக் குறியாக என் கண்களிலே நின்று கண்ணீர் சொரிந்து விழஅந்தக் கண்ணீரை என் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு பயங்கரமான அவ்வேளையில் என்னைக் கைவிடாதேயும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

சுவாசம் விட நான் படும் பாட்டையும்மரண இக்கட்டுக்குள்ளே அகப்பட்டு நான் படும் வேதனையையும் என் பாவங்களுக்குப் பரகாரமாகநான் அனுபவிக்கிற தண்டனையாக ஏற்றுக்கொண்டு என்பேரில் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிடநான் கடைசி மூச்சை வாங்கிஎன் ஆத்துமம் சரீரத்தை விட்டுப்பிரிய கடும் போர் புரியும்போது உமதுபேரில் எனக்குள்ள சிநேகத்தால் உம்மிடம் வர நான் படும் பிரயாசையை ஏற்றுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் சுற்றத்தார்சிநேகிதர் என்னைச் சூழ்ந்துகொண்டுஅலறிப் பதறி மாரடித்து எனக்காக உம்மை மன்றாடிஐயோ சாகிறானே என்று சொல்லியழும்போதுஎன்மேல் இரக்கமாயிரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

குளிர்ந்த உணர்வற்ற என் சரீரத்தினின்று என் ஆத்துமம் பிரியும்போதுநான் அதை உம் திரு இருதயத்துக்கு நேசப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன்என் அன்பான பலியை ஏற்றுக்கொள்ளும் சுவாமி.  தயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

நான் நினையாதபோது திடீரென்று மரணம் எனக்கு வந்தாலும்ஆண்டவரேஎனக்கு உதவ தீவிரித்து வரத் தாமதியாதேயும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

கடைசியாய் என் ஆத்துமம் மகிமைப் பிரதாபமுள்ள உமது சமூகத்திலே நிறுத்தப்பட்டுதன்னுடைய தீர்வையை கேட்க நடுநடுங்கி நிற்கும்போது மதுரமான சேசுவேஎனக்கு நடுவராயிராமல்என் இரட்சகராய் இரும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

என் நல்ல தகப்பனேஎன்னைப் புறக்கணித்துத் தள்ளாமல்என்னைக் கிருபாகடாட்சத்தோடேபார்த்து உம்மை என்றென்றும் வாழ்த்தித் துதிக்க நான் உமது இராச்சியத்திற்கு வரப்பண்ணியருளும் சுவாமிதயாபர சேசுவேஎன்பேரில் தயவாயிரும் சுவாமிதயவாயிரும்.

செபிப்போமாக.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்துக்கும் வல்ல சர்வேசுராஎங்கள் மரண நேரத்தையும்இடத்தையும்சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு மறைக்கத் தேவரீருக்குச் சித்தமாயிற்றுஆகையால் மரண நேரம் வரும்போது நாங்கள் இஷ்டப்பிரசாத அந்தஸ்திலே மரித்துஉமது நித்திய மகிமைப் பாக்கியத்திற்குப் பங்காளிகளாகிறதற்குஎப்பொழுதும் பரிசுத்த புண்ணிய சீவியம் சீவிக்கும்படி எங்களை ஆசீர்வதிக்க வேணுமென்று தேவரீரைப் பிரார்த்திக்கிறோம்இந்த மன்றாட்டுகளை சேசுக்கிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளையும்திரு இரத்தத்தையும்திருக்காயங்களையும் பார்த்துபூங்காவனத்தில் அவர் பட்ட மரண அவஸ்தையினாலேயும் எங்களுக்குத் தந்தருள அவருடைய திருநாமத்தினாலே வேண்டிக் கொள்ளுகிறோம்

ஆமென்.